search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கோவையில் தங்க நகை வியாபாரி வீட்டில் 11 பவுன் நகைகள் கொள்ளை

    கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் ேதடி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை பேரூர் அருகே உள்ள தீத்திப்பளையத்தை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 50). தங்க நகை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மகனை பள்ளியில் விடுவதற்காக சென்றார். பின்னர் மருதமலை முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.

     அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், கம்மல், தங்க நாணயம் உள்பட 10 பவுன் தங்க நகைகள் மற்றும் டேப்டெல் ஆகியவற்றை  கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வீட்டிற்கு திரும்பிய ஹரிகரன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

     இது குறித்து அவர் பேரூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் போலீசார் சம்பவஇடத்துக்கு உடனடியாக விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். 

    இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகை வியாபாரி வீட்டில் 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை ேதடி வருகிறார்கள். மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராவில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள். 
    Next Story
    ×