என் மலர்
நீங்கள் தேடியது "coimbatore news கோவை நியூஸ் கோவை செய்திகள்"
3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை
கோவை:
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்தவர் 37 வயது பெண். இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்தார். அந்த பெண் ஈரோட்டில் உள்ள டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். டைல்ஸ் நிறுவனத்தை கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் நவநீதன் (வயது 50) என்பவர் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் ஈரோட்டில் இருந்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதன் வீட்டுக்கு வந்தார். அதன்பிறகு உடல் கருகிய நிலையில் அந்த பெண் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக தொழில் அதிபர் தரப்பில் அந்த பெண், சிகிச்சைக்காக தன்னிடம் பணம் கேட்டு வந்ததாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்ததாகவும் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அந்த பெண்ணை சந்தித்து வாக்குமூலம் பெற்றனர். அப்போது அந்த பெண் திடுக்கிடும் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். வாக்குமூலத்தில் அந்த பெண் கூறியிருப்பதாவது:-
கணவரை பிரிந்து வாழ்ந்த என்னுடன் தொழில் அதிபர் நவநீதன் நெருங்கி பழகினார். எனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். உடனே நவநீதன் கர்ப்பத்தை கலைக்கும்படி கூறினார். நானும் கர்ப்பத்தை கலைத்தேன். இப்படியே 6 முறை நான் கர்ப்பமாகி கருவை கலைத்துள்ளேன்.
இதில் நான் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டேன். இந்த விவரங்கள் அவரது மனைவி அகிலாவுக்கும் தெரியும். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நான் மருத்துவ செலவுக்கு பணம் கேட்டு நவநீதன் வீட்டுக்கு சென்றேன். அங்கு குளியல் அறைக்கு அழைத்துச் சென்று நவநீதனும், அவரது மனைவியும் சேர்ந்து என் மீது மண்எண்ணையை ஊற்றி தீவைத்தனர். இதில் நான் படுகாயம் அடைந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருந்தார்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஊழியர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் தற்கொலைக்கு முயன்றதாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை, பெண்ணின் வாக்குமூலத்தின் பேரில் கொலை வழக்காக ஆர்.எஸ்.புரம் போலீசார் பதிவு செய்தனர். நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடிச் சென்றபோது அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 2 பேரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் 2 பேரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
பொள்ளாச்சி அடுத்த மலையாண்டி பட்டினம் கொட்டூர் உள்ளாஸ் நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 40). விவசாயி.
இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கோட்டூர் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றார்.
பின்னர் அங்கு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார்.
ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் கோட்டூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர்.
சம்பவத்தன்று போலீசார் கோட்டூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர்.
இதனை பார்த்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அைழத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பிரபுவின் மோட்டார் சைக்கிள் என்பதும், அவர்கள் சிவகங்கையை சேர்ந்த ராஜபாண்டியன் (29) மற்றும் அவரது நண்பர் சேவகமூர்த்தி (20) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நண்பர்களுடன் சினிமாவுக்கு செல்ல அனுமதிக்காததால் விபரீதம்
கோவை:
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் ராஜ்குமார் (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்து இருந்தார்.
சம்பவத்தன்று இவரது பெற்றோர் கோவில் திருவிழாவுக்காக விருதுநகருக்கு சென்று இருந்தனர். ராஜ்குமார் வீட்டில் தனது அண்ணனிடம் நண்பர்களுடன் படத்துக்கு செல்வதாக கூறினார். ஆனால் அவர் படத்துக்கு செல்லக் கூடாது என கூறிவிட்டார். மேலும் அவர் ராஜ்குமாரை வீட்டிற்கு வைத்து பூட்டி விட்டு வெளியே சென்றார்.
தனது அண்ணன் படத்துக்கு செல்ல அனுமதிக்காததால் மிகுந்த மனவேதனை அடைந்த ராஜ்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த அவரது அண்ணன் தனது தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த தகவல் கிடைத்ததும் சிங்காநல்லூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொைல செய்து கொண்ட பிளஸ்-2 மாணவர் ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடும்பத்துடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
கோவை:
நீலகிரியை சேர்ந்தவர் சகாயநாதன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள டீச்சர்ஸ் காலணி பாலாஜி நகர் பகுதியில் குடியேறினார்.
சம்பவத்தன்று சகாயநாதன் தனது குடும்பத்துடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று இரவு சகாயநாதன் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 14 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சகாயநாதன் காரமடை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்து க்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரானுவ வீரரின் வீட்டை உடைத்து கொள்ளை அடித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தப்பி ஓட முயன்றவரை மடக்கி பிடித்தனர்.
கோவை:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கவுண்டம்பள்ளியை சேர்ந்தவர் டிக் விஜய் (வயது 22). இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் லேப் டெக்னிசியனாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஆஸ்பத்திரி முன்பு நின்று கொண்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் திடீரென டிக் விஜயின் செல்போனை பறித்து தப்பிச் சென்றார். இதில் அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.
இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பி ஓட முயன்றவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பொள்ளாச்சியை சேர்ந்த சசிகுமார் என்ற சசி (47) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
டிரைவர் தப்பி ஓட்டம்
கோவை:
கோவை மதுக்கரையை அடுத்த வழுக்குப்பாறை தாசில்தாரராக வேலை செய்து வருபவர் விஜயகுமார்.
சம்பவத்தன்று இவர் அதிகாரிகளுடன் சட்டகல்புதூர்-கன்னமநாயக்கனூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அங்கு தாசில்தார் வாகன சோதனையில் ஈடுபடுவதை கண்டார்.
பின்னர் லாரியை ரோட்டோரம் நிறுத்தி லாரியில் இருந்து குதித்து டிரைவர் தப்பி ஓடினார்.இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த லாரி அருகே சென்று சோதனை செய்தனர். அதில் அனுமதி இல்லாமல் 3 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து தாசில்தார் லாரியை பறிமுதல் செய்து மதுக்கரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த லாரியை ஓட்டி வந்ததது யார்? எங்கு இருந்து மணல் கடத்தி வரப்பட்டது? லாரியின் உரிமையாளர் யார்? விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
13, 14 வயதுடைய குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர்.
கோவை:
கோவை அடுத்த மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு ஓட்டல் மற்றும் தொண்டாமுத்தூர் நரசீபுரம் ரோட்டில் உள்ள ஒரு சிக்கன் கடையில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்தனர்.
இதுகுறித்து கோவை கலெக்டர் அலுவலக தேசிய குழந்தைகள் நல திட்ட அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் குறிப்பிட்ட கடைகளுக்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது மலுமிச்சம்பட்டியில் உள்ள ஓட்டல், மற்றும் தொண்டாமுத்தூரில் உள்ள சிக்கன் கடையில் வேலை பார்த்து வந்த 13, 14 வயதுடைய குழந்தை தொழிலாளர்கள் 2 பேரை அதிகாரிகள் மீட்டனர்.
இதுகுறித்து அந்தந்த போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய ஓட்டல் கடை உரிமையாளர் செட்டிபாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சுதாகரன், மற்றும் தொண்டாமுத்தூர் பாண்டியன் வீதியை சேர்ந்த அப்துல் சமீது(48) ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.80 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பெற்று மோசடி செய்துள்ளார்.
கோவை:
கோவை பேரூர் மெயின் ரோடு செட்டி வீதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது53). தங்க நகை வியாபாரி. இவர் கோவை பெரியகடைவீதி போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் தங்க நகைகளை கோவை செட்டி வீதியில் வசித்த கொல்கத்தாவை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் சுஜித் மைட்டி(40), என்பவரிடம் கொடுத்து, அதனை நகை ஆபரணங்களாக மாற்றி பெற்று விற்பனை செய்து வருகிறேன்.
இந்நிலையில் கடந்த 16-ந் தேதி நான் அவரிடம் 420 கிராம் தங்க நகைகளை கொடுத்து ஆபரணங்களாக மாற்றி தருமாறு கேட்டேன். இதேபோல், எனது நண்பரும் அவரிடம் 578 கிராம் தங்கத்தை கொடுத்தார். ஆனால் சுஜித் மைட்டி எங்களிடம் வாங்கிய நகைகளை ஆபரணங்களாக மாற்றி தராமல் இருந்தார்.
இதனையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர் குறித்து விசாரித்தபோது அவர் தங்கத்துடன் மாயமானது தெரியவந்தது. எனவே அவரை கண்டுபிடித்து எங்களது நகைகளை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதேபோல், செல்வபுரம் இந்திராபுரம் அமல்நகரை சேர்ந்த நகை வியாபாரி சந்தோஷ்(34), என்பவர் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் தெரிவித்திருப்பதாவது:-
நான் கோவை செட்டி வீதியில் வசித்த சுஜித் மைட்டி என்பவரிடம் கடந்த 6 மாதங்களாக தொழில் ரீதியான பழக்கம் வைத்திருந்தேன். இந்நிலையில், கடந்த மாதம் 7-ந் தேதி நான் 759 கிராம் தங்க நகைகளை ஆபரணங்களாக வடிவமைத்து தருவதற்காக சுஜித் மைட்டியிடம் கொடுத்தேன். ஆனால் அவர் திருப்பி கொடுக்காமல் செட்டி வீதியில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார். எனவே அவரிடம் இருந்து நகைகளை மீட்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
சுஜித் மைட்டி கோவையில் மொத்தம் 3 பேரிடம் சுமார் ரூ.80 லட்சம் மதிப்பிலான 1.8 கிலோ தங்கத்தை பெற்று மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.






