search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறுவதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் ப
    X
    மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறுவதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் ப

    மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்

    எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வை 40413 மாணவ-மாணவிகள் எழுதினர்
    மதுரை

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் நேற்று தொடங்கிய நிலையில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு இன்று தொடங்கி உள்ளன. அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று காலை எஸ்.எஸ்.எல்.சி.  தேர்வு தொடங்கியது. 

    முன்னதாக மாணவ- மாணவிகள் தேர்வு நடப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே மையத்திற்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு தேர்வு மைய நுழைவாயிலில், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டன. 

    இதனை தொடர்ந்து மாணவ- மாணவிகள் காலை 9.30 மணிக்கு தேர்வு மையத்துக்குள் அனு மதிக்க ப்பட்டனர். அங்கு அவர்களுக்கு 10 மணிக்கு முதல் தேர்வான மொழிப்பாடமான தமிழ் தேர்வுக்கான வினா தாள்கள் வழங்கப்பட்டன. 

    மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வை எழுதினர்.மதுரை மாவட்டத்தில் 150 மையங்களில் தேர்வு நடந்து வருகிறது. இங்கு 487 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 40, 413 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். 

    இவர்களில் மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 653. மாணவிகளின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 758 ஆகும்.எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை முன்னிட்டு பள்ளி கல்வித்துறை சார்பில் 265 துறை அலுவலர்கள், 125 கூடுதல் துறை அலுவலர்கள் உள்பட 1929 துறை கண்காணிப்பாளர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

    இது தவிர 600 பறக்கும்படையினரும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.மதுரையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும் அனைத்து மையங்களிலும் வெளி நபர் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் போலீசார் பலத்த பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×