என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2-வது கணவர் கைது
Byமாலை மலர்5 May 2022 2:33 PM IST (Updated: 5 May 2022 2:33 PM IST)
தல்லாகுளம் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சமையல் மாஸ்டர் கணேசனை கைது செய்தனர்.
மதுரை:
மதுரை ராமராயர் மண்டபத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர், “எனது 12 வயது பேத்திக்கு பாலியல் கொடுமை நேர்ந்து உள்ளது. அவளை இப்போது காணவில்லை. எனவே போலீசார் இந்த விஷயத்தில் தலையிட்டு எனது பேத்தியை மீட்டுத்தர வேண்டும்” என்று மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதுதொடர்பாக விசாரித்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் ராஜசேகரன் மேற்பார்வையில், உதவி கமிஷனர் அக்பர்கான் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக அதிரடி விசாரணை நடத்தினார்கள்.
அப்போது 12 வயது சிறுமி தாயாருடன் மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த கணவரை இழந்த 40 வயது பெண் 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மகளுடன் வசித்து வந்தார். அந்த பெண் அந்தப் பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 36) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில்கணேசன் தனது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 6-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் கணேசன் சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவரை பாட்டி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று உள்ளார். அப்போது மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் விசாரித்ததில் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளாள். இதையடுத்து தல்லாகுளம் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சமையல் மாஸ்டர் கணேசனை கைது செய்தனர் .

Next Story
×