என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தக்காளி
  X
  தக்காளி

  தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை குறைந்ததால் தக்காளி விலை உயர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி அறுவடை நிறைவடைந்ததால் தக்காளி வரத்து வெகுவாக குறைந்தது.

  கோவை:

  கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்டவை முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது.

  விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை பூலுவபட்டி மற்றும் தொண்டாமுத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் கடந்த மாதம் தக்காளி வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் 14 கிலோ எடை உள்ள ஒரு டிப்பர் தக்காளி ரூ.120 முதல் அதிகபட்சமாக ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

  இதன் பின்னர் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி அறுவடை நிறைவடைந்ததால் தக்காளி வரத்து வெகுவாக குறைந்தது.

  இந்தநிலையில் கடந்த 15 நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பூலுவப்பட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் 14 கிலோ எடை உள்ள ஒரு டிப்பர் தக்காளி ரூ.600க்கு விற்பனை செய்யப்பட்டது.

  மேலும் தக்காளி வரத்து குறைந்ததால் நேற்று ஒரு டிப்பர் தக்காளி ரூ.840க்கு விற்பனை செய்யப்பட்டது. வருகிற நாட்களில் மேலும் தக்காளியின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

  Next Story
  ×