என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆட்டோ திருடி கைதான சஞ்சய், ஸ்ரீராம்.
  X
  ஆட்டோ திருடி கைதான சஞ்சய், ஸ்ரீராம்.

  ஆட்டோ திருடிய 2 வாலிபர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கபிஸ்தலம் அருகே ஆட்டோ திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
  கபிஸ்தலம்:

  கபிஸ்தலம் அருகே உள்ள உள்ளிக்கடை தெற்கு தெருவில் வசிப்பவர் சதீஷ் (வயது 32). இவர் கடந்த 18-ம் தேதி புதிதாக பயணியர் ஆட்டோ ஒன்றை கும்பகோணத்தில் இருந்து வாங்கி வந்து தன் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு இரவு தூங்கினார். காலையில் எழுந்து பார்த்தபோது ஆட்டோவை மர்மநபர்ககள் திருடிச்சென்றது தெரிய-வந்தது.

  இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ் கபிஸ்தலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரிச்சட் செல்வகுமார், தலைமை காவலர் கபிலன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

  இந்நிலையில் எதிர் வீட்டில் வசிக்கும் தியாக-ராஜன் மகன் ஸ்ரீராம் (19), என்பவரும், உள்ளிக்கடை நரசிங்கபுரம் செந்தில்குமார் மகன் சஞ்சய் (19) என்பவரும் கபிஸ்தலம் அருகே உள்ள தியாகசமுத்திரம் மெயின் ரோட்டில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். 

  அவ்வழியே சென்ற போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தியதில் 2 பேரும் சதீசின் ஆட்டோவை திருடியது தெரியவந்தது. ஆட்டோவை இளங்கார்குடி கிராமத்தில் மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. 

  இதையடுத்து ஆட்டோவை மீட்டு 2 வாலிபர்களையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×