search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெயில்
    X
    வெயில்

    திருத்தணியில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது

    வெயிலின் பாதிப்பில் இருந்து தப்பிக்க பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கினர். குளிர்பான கடைளில் பழஜுஸ், கரும்பு ஜுஸ், கிர்ணிபழம், மற்று நுங்கு உள்ளிட்டவை சாப்பிட்டு சூட்டை தணித்தனர்.

    திருத்தணி:

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது.

    இதேபோல் திருத்தணியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இன்று அதிகபட்சமாக 103.1டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. இதன் காரணமாக காலை 8 மணி முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. வெப்பத்துடன் அனல் காற்றும் வீசியதால் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.

    திருத்தணி பஸ் நிலையம், மார்க்கெட் உட்பட மக்கள் நடாமட்டம் நிறைந்த பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.. வாகன ஓட்டிகள் வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு இடையே வாகனத்தை ஓட்டிச்சென்றனர்.

    வெயிலின் பாதிப்பில் இருந்து தப்பிக்க பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கினர். குளிர்பான கடைளில் பழஜுஸ், கரும்பு ஜுஸ், கிர்ணிபழம், மற்று நுங்கு உள்ளிட்டவை சாப்பிட்டு சூட்டை தணித்தனர்.

    இனி வரும் நாட்களிலும் திருத்தணி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றே தெரிகிறது. இதே போல் சென்னை மீனம்பாக்கத்தில் 96.98 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 95.18 டிகிரியும் வெயில் கொளுத்தி உள்ளது.

    Next Story
    ×