search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் தக்காளி விலை தொடர்ந்து அதிகரிப்பு

    கோயம்பேடு சந்தைக்கு தினசரி 65 முதல் 70 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம் ஆனால் கடந்த சில நாட்களாக 40 முதல் 45 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வருகிறது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா மாநிலம் குண்டுப்பள்ளி, கோலார், ஆந்திரா மாநிலம் பலமனேர், புங்கனூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது.

    இன்று 45 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ10-க்கு விற்ற தக்காளி தற்போது 5 மடங்கு அதிகரித்து ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்கப்படுகிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ29-க்கும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ35-க்கும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது :-

    கோயம்பேடு சந்தைக்கு தினசரி 65 முதல் 70 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம் ஆனால் கடந்த சில நாட்களாக 40 முதல் 45 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வருகிறது.

    தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் அந்த பகுதியில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக அங்குள்ள வியாபாரிகளும் தற்போது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தக்காளியை அதிகளவில் கொள்முதல் செய்து வருகின்றனர்.

    இதன் காரணமாகவே கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளி வரத்து குறைந்து விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு மேலும் ஒரு மாதம் வரை நீடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×