என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வீடு கட்டும் பணிக்கான ஆணையை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை வழங்கினார்.
  X
  வீடு கட்டும் பணிக்கான ஆணையை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை வழங்கினார்.

  ஆய்க்குடி பேரூராட்சியில் 160 பேருக்கு வீடு கட்டும் ஆணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆய்க்குடி பேரூராட்சியில் 160 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணிக்கான ஆணையை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை வழங்கினார்.
  தென்காசி:

  தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ்  மற்றும் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர்  ஆகியோர் பரிந்துரையின் பேரில் ஆய்க்குடி பேரூராட்சியில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் (நகர்புறம்) அனைவருக்கும் வீடுகள் திட்டத்தின் கீழ் 160 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில்  மொத்தம் ரூ.336 லட்சத்தில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் விழா ஆய்க்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

  தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கி பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை வழங்கினார்.

  இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சுந்தர்ராஜன், செயல் அலு-வலர் மாணிக்கராஜ், துணை தலைவர் மாரியப்பன் தென்காசி யூனியன் சேர்மன் வல்லம் ஷேக் அப்துல்லா, துணை தலைவர் கனகராஜ் முத்துப் பாண்-டியன், கடையநல்லூர் நகராட்சி சேர்மன் மூப்பன் ஹபீபூர் ரகுமான், தென்காசி வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வல்-லம் திவான் ஒலி, ஆய்க்குடி பேரூர் தி.மு.க.  செயலாளர் சிதம்பரம், கிளாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  மேலும் ஆய்க்குடி பேரூராட்சி  வார்டு உறுப்பினர்கள் இலக்கியா,  கார்த்திக், உலகம்மாள், புணமாலை, பசுமதி, முத்துமாரி,  நமச்சிவாயம், விமலாராணி, சிந்துமொழி, வெங்கடேஷ், அருள் வளர்மதி, ஷோபா, பேச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×