என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆறாக்குளம் என்ற இடம் அருகே செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரை வழிமறித்து அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மின்னலென மறைந்து விட்டனர்.
  பல்லடம்:

  பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையை சேர்ந்த கோபால் மனைவி பிரிசில்லா (வயது 35). இவர் பல்லடம் அருகே முத்தாண்டிபாளையம் என்ற இடத்தில் மருந்துக் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி காரணம் பேட்டையில் இருந்து முத்தாண்டிபாளையத்திற்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.

  ஆறாக்குளம் என்ற இடம் அருகே செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரை வழிமறித்து அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மின்னலென மறைந்து விட்டனர். 

  இதனால் அதிர்ச்சி அடைந்த பிரிசில்லா தங்கச்சங்கிலியை வழிப்பறி செய்தது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

  இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து துப்பு துலக்கிய போலீசார், இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட கோவை மாவட்டம், மதுக்கரை, சரஸ்வதி நகரைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் பிரசன்ன ராஜ்( வயது, 21) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1/2 பவுன் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

  பின்னர் அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான சூர்யா என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
  Next Story
  ×