search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈஸ்டர் பண்டிகை
    X
    ஈஸ்டர் பண்டிகை

    ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனை

    மதுரையில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலிகள், ஆராதனைகள் நடந்தது.
    மதுரை

    கிறிஸ்தவர்கள் கடந்த மார்ச் 2-ந்தேதி சாம்பல் புதன் முதல் இன்று (17-ந் தேதி) ஈஸ்டர் வரை தவக்காலம் கடைபிடித்து வந்தனர். தவக்காலத்தின் நிறைவாக இயேசு உயிர்த்த ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு மதுரையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

    கீழவாசல் தூயமரியன்னை பேராலயத்தில் பேராயர் அந்தோணி பாப்புசாமி சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.  புதூர் லூர்தன்னை ஆலயம், ஞானஒளிவுபுரம் புனிதவளனார் ஆலயம், பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலயம், அஞ்சல் நகர் சகாய அன்னை ஆலயம், நரிமேடு சி.எஸ்.ஐ. கதிட்ரல் தேவாலயம், எச்.எம்எஸ். காலனி புதிய ஜீவிய சபை உட்பட அனைத்து தேவாலயங்களிலும் ஈஸ்டர் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. 

    கத்தோலிக்க திருச்சபைகளில்  திருப்பலிக்கு முன்னதாக விளக்குகள் அனைக்கப்பட்டு பீடத்தின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பெரிய பாஸ்கா மெழுகு வர்த்தியில் ஒளி ஏற்றப்பட்டு திருப்பலி நடந்தது.
    Next Story
    ×