search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. கவுன்சிலர் அன்பகம் திருப்பதி தலைமையில்  மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
    X
    அ.தி.மு.க. கவுன்சிலர் அன்பகம் திருப்பதி தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் அன்பகம் திருப்பதி தலைமையில்திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

    நாங்கள் எவ்வகையிலும் அரசிடமிருந்து நிவாரணம் பெறவில்லை. எங்கள் பகுதிக்கு வரும் வாய்க்கால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் முன்பே துண்டிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் பின்புறமுள்ள ஓடையில் கலந்து சென்றுவிடுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டுக்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

    இதன்பிறகு அ.தி.மு.க.கவுன்சிலர் அன்பகம் திருப்பதி தலைமையில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டுக்கு உள்பட்ட ஜீவா நகர், கே.வி.ஆர். நகர், அண்ணா நகர், முத்துமாரியம்மன் கோயில் வீதி ஆகிய பகுதிகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக 450-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். 

    மேற்படி எங்கள் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளுக்கான வரியையும், மின் இணைப்புகளுக்கான மின் கட்டணத் தொகை மற்றும் வைப்பீடுத் தொகையையும் தவறாமல் செலுத்தி வருகிறோம். 

    கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் எந்தவித மழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்படவில்லை.

    திருப்பூர் மாநகரம் கடந்த 2011-ம் ஆண்டு வெள்ளத்தால் சூழ்ந்தபோதும் எங்கள் பகுதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நாங்கள் எவ்வகையிலும் அரசிடமிருந்து நிவாரணம் பெறவில்லை. 

    எங்கள் பகுதிக்கு வரும் வாய்க்கால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் முன்பே துண்டிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் பின்புறமுள்ள ஓடையில் கலந்து சென்றுவிடுகிறது. 

    இதை நாங்கள் கடந்த அரசிடம் வலியுறுத்தி எங்கள் பகுதியை வகை மாற்றம் செய்து தர ஏற்பாடு செய்யக் கோரினோம். தொடர்ந்து அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. 

    இதனிடையே, தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தாங்கள் அந்தப் பணியை தொடர்ந்து செய்து எங்கள் பகுதியை வகை மாற்றம் செய்து எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் அங்கேயே தொடர்ந்து வசிக்க ஆவணம் செய்து தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அங்கு நோட்டீஸ் வழங்குவதற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டினர். 

    இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மத்தியில் மேயர் என்.தினேஷ்குமார்பேசுகையில், 

    சட்டப்படியான வாய்ப்புகளை பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×