search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகண்ட பிள்ளையார் கோவில் தேரோட்டம்
    X
    நீலகண்ட பிள்ளையார் கோவில் தேரோட்டம்

    நீலகண்ட பிள்ளையார் கோவில் தேரோட்டம்

    பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தீராத வினை தீர்க்கும் அருள்மிகு நீலகண்ட பிள்ளையார் கோயில் சித்ரா பௌர்ணமி பெருந்திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

    பேராவூரணி அருள்மிகு நீலகண்ட பிள்ளையார் ஆலயத்தில் சித்ரா பவுர்ண-மியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கடந்த 7ம் தேதி

    காலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. வண்ணமயில் வாகனம், அன்ன வாகனம், புஷ்பவா-கனம், ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா வந்தது. 9 ஆம் நாள் திருவிழாவான நேற்று அதிகாலை

    முதல் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, வேல் காவடி, சடல் காவடி, பறவைக் காவடிகள் வந்தது. மாலை 5.30 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் வள்ளி

    தெய்வானையுடன் முருகன் தேரில் எழுந்தருளினார்.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்-தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேரோட்டத்தில்

    இளைஞர்கள் விசில் ஊதிய படியும் அரோகரா கோஷமிட்-டபடி தேரோடும் வீதியில் வந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து-கொண்ட தேரோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக் குமார்

    பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர்,  திமுக ஒன்றிய செயலாளர் க.அன்பழகன், பாஜக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வீரசி-ங்கம், ஆசிரியர்கள் கிருஷ்ணன், ஜெய்சங்கர் மற்றும்

    பலர் கலந்து கொண்டனர்.இன்று சித்ரா பவுர்ணமி முன்னிட்டு மாலை 6 மணி அளவில் தீர்த்த திருவிழாவும், நாளை 17 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு

    தெப்பமும், 18 ந்தேதி திங்கள்கிழமை விடையாற்றி உற்சவம் மண்டலாபிஷேகம் நடைபெறுகிறது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் தலைவர் பெ.கணேசன் சங்கரன், பரம்பரை

    அறங்கா-வலர் சு.குப்பமுத்து சங்கரன், கோயில் நிர்வாக அதிகாரி சிதம்பரம், ஸ்தா-னிகர் சங்கரன் வகையறாக்கள், முடப்புளிக்காடு கிராமத்-தார்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து

    வருகின்றனர்.தாகம் தணிக்க தண்ணீர் வழங்கிய இஸ்லாமிய இளைஞர்கள்ஜமாலியா பள்ளிவாசல் முன்பு, இஸ்லாமிய இளை-ஞர்கள் சிலர், பிளாஸ்டிக் கேன்களில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தனர். அதில் இருந்த தண்ணீரை, காவடி தூக்கி வந்த பக்தர்கள் வெப்பம் தணிக்க
     
    பலரும் பயன்படுத்திக் கொண்டனர். மேலும், இஸ்லாமிய இளைஞர்கள் குழாய் மூலம் தார்ச்சாலையை தண்ணீரால் நனைத்து வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தினர்.

    காவடி எடுத்து வந்த பக்தர்கள் கால்களின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளித்தனர்.

    தாகம் தீர்க்க குடிதண்ணீர் பாட்டில்களையும் வழங்-கினர். இஸ்லாமிய இளைஞர்களின் இந்த மதம் கடந்த மனிதநேயச் செயல் பலரது பாராட்டையும் பெற்றது.
    Next Story
    ×