search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளாகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்ட காட்சி.
    X
    வளாகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்ட காட்சி.

    எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத்தேர்வு

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத்தேர்வு நடைபெற்றது.
    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பல முன்னணி நிறுவனங்கள் மூலம் வளாகத்தேர்வு நடத்தப்படுகிறது.

    அதுபோல் தற்போது சென்னையில் உள்ள ஒரு நிறுவனம், இறுதியாண்டு மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் துறை மாணவ, மாணவிகள் சுமார் 65 பேருக்கு இணையவழி மூலம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.

    இதனை நிறுவனத்தின் மனிதவளத்துறை அதிகாரி ஹரி பிரசாத் நடத்தினார். எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம் மற்றும் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் தமிழ்வீரன் முன்னிலை வகித்தார். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் பொன் சுவேதா வரவேற்று பேசினார்.

    வளாகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 47 மாணவர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது. வளாகத் தேர்வு ஏற்பாடுகளை அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×