search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூடைகள்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூடைகள்.

    கூடலூர் அருகே வீட்டில் பதுக்கிய 3 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

    கூடலூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 ஆயிரம் கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஜீப் டிரைவரை கைது செய்தனர்.
    கூடலூர்:

    தமிழக, கேரள எல்லையில் தேனி மாவட்டம் உள்ளதால் இங்கிருந்து அதிக அளவு ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை போலீசார் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

    கூடலூர் அருகே ஒரு வீட்டில் ரேசன் அரிசி மூடைகள் பதுக்கி வைத்திருப்பதாக ஏ.எஸ்.பி. ஸ்ரேயா குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன், சப்இன்ஸ்பெக்டர் குணா மற்றும் போலீசார் தண்ணீர் தொட்டி தெருவில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது32) என்பவரது வீட்டில் 60 மூடைகளில் 3 ஆரயிம் கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    பிரகாஷ் கேரளாவுக்கு கூலி ஆட்களை ஜீப் மூலம் அழைத்து செல்லும் வேலை பார்த்து வருகிறார். அப்போது ரேசன் அரிசி மூடைகளையும் பதுக்கி வைத்து அங்குள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இது குறித்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ரேசன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பிரகாசையும் கைது செய்து அவர் யாரிடம் இந்த ரேசன் அரிசியை வாங்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×