என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குழந்தை
  X
  குழந்தை

  திருவள்ளூரில் ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஞ்சனாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். பின்னர் அவர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

  திருவள்ளூர்:

  திருவள்ளூர், பத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லியா காதர் பாஷா (27). கூலி தொழிலாளி. இவரது மனைவி காஞ்சனா. பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2 ஆண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். காஞ்சனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

  இந்தநிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  சிறிது நேரத்தில் வந்த ஆம்புலன்சில் காஞ்சனாவை ஏற்றி பிரசவத்திற்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

  இதற்குள் காஞ்சனாவுக்கு பிரசவவலி அதிகமானது. இதையடுத்து ஆம்புலன்சில் இருந்த மருத்துவ குழுவினர் காஞ்சனாவுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

  அப்போது காஞ்சனாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். பின்னர் அவர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

  சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்சு மருத்துவ குழுவினரை பொதுமக்கள் பாராட்டினர்.

  Next Story
  ×