search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
    X
    சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

    ஆண்டிபட்டி காளியம்மன் கோவிலில் பங்குனிப் பொங்கல் விழா

    ஆண்டிபட்டி காளியம்மன் கோவிலில் பங்குனிப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள காளியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் விழா விமரிசையாக தொடங்கியது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சாட்டப்பட்டு தொடங்கிய திருவிழா, வைகை அணையிலிருந்து திருமஞ்சனக் குடம் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து விழா தொடங்கியது.

    அதன் தொடக்கமாக இரவு 9 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து நான்கு நாட்கள் திருவிழா களை கட்டியிருக்கும். அப்போது பக்தர்கள் பொங்கல் வைத்தும், தீச்சட்டி, பால்குடம் ,காவடி எடுத்தும் முளைப்பாரி எடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    வருகிற திங்கட்கிழமை சிறப்பு நாதஸ்வர கச்சேரியுடன் அம்மன் சிங்க வாகனத்தில் விடிய விடிய ஆண்டிபட்டி நகர் முழுவதும் நகர்வலம் வந்து மறுநாள் காலை கோயிலை அடைந்து விழா நிறைவடையும்.

    பழமை வாய்ந்த இக்கோயில், ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள கோயில்களுக்கு எல்லாம் தாய் கோயில் என்று அழைக்கப்படுவதால் ,இந்த கோவில் பொங்கல் திருவிழா கும்பிடு தொடங்கிய பின்புதான் மற்ற கோயில்களிலும் கும்பிடுவது என்பது சிறப்பம்சமாகும்.
    Next Story
    ×