என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விழிப்புணர்வு கருத்தரங்கம்.
  X
  விழிப்புணர்வு கருத்தரங்கம்.

  அரசு கலை கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேராவூரணி அரசு கலை கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
  பேராவூரணி:

  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் தனராஜன் தலைமை வகித்தார்.

  கருத்தரங்கில், மத்திய வேதியியல் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை கிண்டியில் உள்ள சிப்பெட் (பெட்ரோல் கெமிக்கல்ஸ் என்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி மத்திய நிறுவனம்) வேலை வாய்ப்பு அலுவலர் பேராசிரியர் நீலகண்டன் கலந்து கொண்டு, இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு தரும், கூடுதல் படிப்பு பற்றியும், இத்துறையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்தும் விளக்கிப் பேசினார். 

  மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர்.பழனிவேலு வரவேற்றார்.நிறைவாக பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார். இதில் இயற்பியல் மற்றும் வேதியியல் துறை மாணவ-மாணவிகள் 120 பேர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×