search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நெல் கொள்முதல் மையங்களில் ஆன்லைன் முன்பதிவு முறையால் விவசாயிகள் பாதிப்பு

    கொள்முதல் மையம் திறப்பதில் சில மாற்றங்கள் செய்து, ‘ஆன்லைன்’ மூலம் முன்பதிவு செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. காவிரி டெல்டா பகுதிகளில் நெல் சாகுபடிக்கு தேவையான விதை நெல், தாராபுரத்தில் இருந்தே கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படுகின்றன.

    கொள்முதல் மையம் திறப்பதில் சில மாற்றங்கள் செய்து, ‘ஆன்லைன்’ மூலம் முன்பதிவு செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இருப்பினும் விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்து  காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    வீண் தாமதத்தால் நொந்துபோன விவசாயிகள், விதை நிறுவனங்களுக்கு நெல்லை விற்று வருகின்றனர். சன்ன ரகத்துக்கு கிலோ 21.65 ரூபாயும், மோட்டா ரகத்துக்கு, 21.15 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் பதிவு செய்ய தாமதம் ஆவதாலும், பல்வேறு குளறுபடி காரணமாகவும் கிலோ 13 ரூபாய்க்கு விதை நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    இது குறித்து தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து கூறுகையில்:

    தனியார் நிலத்தில் இந்தாண்டு கொள்முதல் மையம் திறக்கப்படாதது ஏமாற்றம். அரசு கொள்முதல் மையத்துக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.

    குறிப்பாக, ‘ஆன்லைன்’ முன்பதிவு செய்வதில் விவசாயிகளுக்கு சிரமமாக உள்ளது. கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதுடன் ‘ஆன்லைன்’ முன்பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும். பழையபடி, சிட்டா அடங்கலுடன் சென்று விவசாயிகள் பதிவு செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்றார். 
    Next Story
    ×