search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மன் பெட்டியை சுமந்து வந்த அறங்காவலர் மற்றும் பூசாரிகள்
    X
    அம்மன் பெட்டியை சுமந்து வந்த அறங்காவலர் மற்றும் பூசாரிகள்

    தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா

    தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா நடைபெற்றது
    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கொடைக்கானல் மலையடி வாரத்தில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகாசிவராத்திரி விழா 6 நாட்கள் நடைபெறும். திருவிழா வெகு விமரிசையாக கொண்டா டப்படும். இந்த வருடம் மாசித் திருவிழாவிற்காக கோவிலில் கொடியேற்றம் கடந்த மாதம் 8ம் தேதி நடைபெற்றது. இதனை தொடந்து நேற்று (1ம் தேதி) முதல் திருவிழா தொடங்கி வருகிற 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    கோவில் திருவிழா விற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். மேலும் திருவிழா தொடக்கமாக கோவிலின் அறங்காவலர்கள் மஞ்சளாற்றின் கரையில் இருந்து காமாட்சி அம்மனின் பொருட்கள் அடங்கிய பெட்டியை அலங்காரம் செய்து அதை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    பின்னர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து குல தெய்வ வழிபாட்டிற்காக வந்த பக்தர்கள் பால்குடம், காவடி, மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்து செல்கின் றனர்.

    4 போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் செயல் அலுவலர் வைரவன் தொடர்ந்து நிர்வாகப் பணிகளை கவனித்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறார்.
    Next Story
    ×