search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தென்காசி மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஜூலை 31-ந் தேதி வரை அரவை கொப்பரை கொள்முதல்

    மத்திய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரவை கொப்பரை கொள்முதல் ஜூலை 31-ந்தேதி வரை செய்யலாம் என தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    நெல்லை:

     மத்திய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரவை கொப்பரை
    கொள் முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி குறைந்தபட்ச ஆதார விலையாக ஒரு கிலோ அரவை கொப்பரைக்கு ரூ. 105.90 என்ற விலையில் 1,900 டன்  கொப்பரை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதற்காக தென்காசி, கடையநல்லூர், பாவூர்சத்திரம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், முதன்மை கொள்முதல் நிலையங்களாக செயல்படும்.

     கொப்பரை கொள்முதல் ஜூலை 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கான கிரையத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

     கொள்முதல் செய்யப்பட உள்ள கொப்பரையில் அயல் பொருட்கள் அதிகபட்ச அளவு 1 சதவீதமும், பூஞ்சாணம் மற்றும் கருமைநிறம் கொண்ட கொப்பரை 10 சதவீதமும் சுருக்கம் கொண்ட கொப்பரை 10 சதவீதமும் ஈரப்பதம் 6 சதவீதமும் நியாயமான சராசரி தரம் இருக்க வேண்டும்.

     இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்ட அடங்கல், ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் தென்காசி 94439- 23501, கடையநல்லூர் 70105-76162, பாவூர்சத்திரம் 87788-92076 ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூட  தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு செயலாளர், நெல்லை விற்பனைக்குழு, நெல்லை என்ற முகவரி மற்றும் 94875-08570 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  இத்தகவல் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×