search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    திருப்புதல் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை ஒரு வாரத்திற்குள் முடிக்க உத்தரவு

    விடைத்தாளில் மாணவர்களின் பதிவு எண்கள் மட்டும் இருக்கும். பிற தகவல்கள் எதுவும் இருக்காது.
    உடுமலை:

    10-ம்வகுப்பு, பிளஸ்- 2 மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகள் கடந்த 9-ந்தேதி தொடங்கி முடிந்தது. பொதுத்தேர்வு போன்றே உரிய விதிமுறைகளின் படி இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன்படி ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்தவுடன் அன்றைய தினமே உடுமலை எஸ்.கே.பி., பள்ளி சேகரிப்பு மையத்தில் விடைத்தாள் ஒப்படைக்கப்பட்டது. 

    அதேநேரம் விடைத்தாள் சேகரிப்பு மைய தொடர்பு அலுவலர்கள், பள்ளிகளில் இருந்து பெறப்படும் விடைத்தாள்களை பள்ளி எண் வாரியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைத்தனர்.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சேகரிப்பு மையத்தில் இருந்து மதிப்பீட்டு பணிக்காக ஒவ்வொரு பள்ளிக்கும் விடைத்தாள்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    தற்போது சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் வாயிலாக திருத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்கு விடைத்தாள் திருத்தம் செய்ய ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பிற ஆசிரியர்கள் வீட்டிலேயே விடைத்தாள்களை திருத்தம் செய்து வரும் 21-ந்தேதி அவரவர் பள்ளியில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    விடைத்தாளில் மாணவர்களின் பதிவு எண்கள் மட்டும் இருக்கும். பிற தகவல்கள் எதுவும் இருக்காது என்பதால் விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி இருக்காது. 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×