search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மாநகராட்சி தேர்தலில் ஓட்டு போடுவதற்காக மதுரைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வரிசையில் காத்தி
    X
    மதுரை மாநகராட்சி தேர்தலில் ஓட்டு போடுவதற்காக மதுரைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வரிசையில் காத்தி

    100 வார்டுகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

    நகர்ப்பற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சி 100 வார்டுகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.
    மதுரை

    தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டு இருந்தன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.

    முன்னதாக வாக்குச் சாவடிகளில் வைக்கப் பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின்  முகவர்கள் முன்னிலையில் சரி பார்க்கப்பட்டது. அதன் பிறகே வாக்குப்பதிவு தொடங்கியது.

    அனைத்து வார்டுகளிலும் காலையில் வாக்களிப்பதில்  மக்கள் ஆர்வம் காட்டாத நிலை ஏற்பட்டது. இதனால்  வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க கூட்டம் இல்லை. ஆனால் நேரம் செல்ல...செல்ல... மக்கள் திரண்டு வந்து வாக்களித்தனர். இதனால் 100 வார்டுகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது.

    பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்து  வெயிலையும் பொருட்படுத்தாது வாக்களித்தனர். இதேபோல்  முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்தனர். அவர்கள் வாக்ளிக்க அதிகாரிகள் உதவி செய்தனர்.

    பெண் மாற்றுத்திறனாளி ஒருவர்  ஆட்டோவில் வந்து இறங்கி பின்னர் சக்கர நாற்காலியில் அமர்ந்து   வாக்குச்சாவடிக்கு சென்று  வாக்களித்தார். இதேபோல் முதியவர் ஒருவர் ஊன்று கோல் உதவியுடன் வாக்குச் சாவடிக்கு வந்தார்.   

    திருப்பரங்குன்றம், புதூர், காளவாசல், சிம்மக்கல், தல்லாகுளம் உள்பட பல்வேறு பகுதி வாக்குச்சாவடிகளில்  மதிய உணவுக்கு பிறகு ஏராளமானோர் வாக்களிக்க வரிசையில் நின்றனர்.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் முறையாக நடைபெறுகிறதா? என்பதை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அனீஷ்சேகர் ஆய்வு செய்தார். அவர் தனது வாக்கை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள வாக்குச்சாவடியில் காலையிலேயே பதிவு செய்தார்.

    பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது-.  பகல் 12மணி வரை 21சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.
    Next Story
    ×