search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தீத்தாம்பாளையம் பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை

    மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தாம் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 300 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் திங்கள் அன்று மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கவிதா ஆகியோர் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி அதற்கு உண்டான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என கேட்டுக் கொண்டதன் பேரில் பெற்றோர் மற்றும் மாணவ மாணவிகள் கலைந்து சென்றனர்.

    இந்தநிலையில் நேற்று பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பட்டதாரி கணித ஆசிரியர், பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய ஆட்கள், நடுநிலை பள்ளியாக இருப்பதை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்த கோருவது என முடிவு செய்தனர்.

    கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் சிவகுமார், ஜெயந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சாமிநாதன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி உட்பட ஆசிரிய ஆசிரியைகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×