search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தில் ஓட்டுப்பதிவுக்கான பொருட்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரம்

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களுடன் ஓட்டுச்சாவடிக்கு தேவையான 21 வகையான பொருட்களும், கொரோனா ‘கிட்’களும் தயார் நிலையில் உள்ளன.
    திருப்பூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில், மாவட்ட தேர்தல் பிரிவினர் 1,319 ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சியின் 60 வார்டுகள், 6 நகராட்சிகளின், 146 வார்டுகள், 15 பேரூராட்சிகளின் 214 வார்டுகள் என 420 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. 20 வார்டு உறுப்பினர்கள், போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

    தி.மு.க., கூட்டணி, அ.தி.மு.க., கூட்டணி, நாம் தமிழர் கட்சி, ம.நீ.ம., அ.ம.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., உட்பட கட்சி வேட்பாளர்களும், சுயேச்சைகளும் களமிறங்கியுள்ளனர். மாநகராட்சியில்  494 பேர், நகராட்சிகளில் 661 பேர், பேரூராட்சிகளில் 765 பேர் என 1,920 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். உள்ளாட்சி தேர்தலுக்காக 1,319 ஓட்டுச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.

    வேட்பாளர் மற்றும் சின்னங்களுடன் ஓட்டுச்சீட்டு பொருத்தப்பட்டு அனைத்து உள்ளாட்சிகளிலும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், ‘ஸ்டிராங் ரூம்‘களில் தயார்நிலையில் உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களுடன் ஓட்டுச்சாவடிக்கு தேவையான 21 வகையான பொருட்களும், கொரோனா ‘கிட்’களும் தயார் நிலையில் உள்ளன. 

    அவற்றை ஓட்டுச்சாவடி வாரியாக பிரித்து, ‘பேக்கிங்’ செய்யும் பணி நடந்து வருகிறது. இவை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு 18-ந்தேதி மதியத்திற்குள் ஓட்டுச்சாவடி வாரியாக சென்று ஒப்படைக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.  
    Next Story
    ×