search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சேலத்தில் கடையில் தீ விபத்து

    சேலத்தில் டூல்ஸ் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
    சேலம்:

    சேலம் சாரதா கல்லூரி சாலையில் பல்வேறு உபகரணங்கள் விற்பனை செய்யும் பவர் டூல்ஸ் கடை உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

    உடனே அப்பகுதியினர் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அழகாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×