search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தில் 61 கட்டுப்பாட்டு மண்டலங்கள்

    கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களும் (தொற்று அதிகம் உள்ள பகுதி) அதிகரித்துள்ளன.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாள் ஒன்றின் பாதிப்பு 100-க்கும் கீழ் இருந்து வந்தது. ஆனால் சில வாரங்களாக படிப்படியாக தொற்று அதிகரிக்க தொடங்கியது. தற்போது நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த 2 நாட்களாக ஒரு நாள் பாதிப்பு மாவட்டத்தில் 1500-ஐ கடந்துள்ளது.

    இதற்கிடையே கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களும் (தொற்று அதிகம் உள்ள பகுதி) அதிகரித்துள்ளன. கட்டுப்பாட்டு மண்டலங்கள் 61-ஆக சுகாதாரத்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

    திருப்பூர் மாவட்டத்தில் 61 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் உள்ள பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும் எடுக்கப்பட உள்ளன. வெளிநபர்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு செல்லவும், உள்ளே இருக்கிறவர்கள் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
    Next Story
    ×