search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜிகே வாசன்
    X
    ஜிகே வாசன்

    தமிழக மீனவர்கள் படகை ஏலம் விட இலங்கையை அனுமதிக்கக்கூடாது- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

    தமிழக மீனவர்களின் அனைத்துப் படகுகளை உடனடியாக ஒப்படைக்க இந்திய அரசு, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாகப்பட்டின மீனவர்கள் வேதாரண்யம் அருகே கோடியக்கரைக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 மீனவர்கள் மீது இரும்பு கம்பி, அரிவாள், ரப்பர் கட்டை ஆகியவற்றால் தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளனர்.

    மேலும் மீனவர்களின் வலை, பேட்டரி, செல்போன், ஜி.பி.எஸ்., வாக்கி டாக்கி, டீசல் போன்றவற்றை அபகரித்துச் சென்றனர். காயம் அடைந்த மீனவர்கள் வேதாராண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு
    தமிழக அரசு
    உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்து விரைவில் குணம் அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மீனவர்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன்பிடிக்கும்போதே இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி அச்சுறுத்துவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே மத்திய அரசு, இலங்கை அரசிடம் உடனடியாக பேசி, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்களின் அராஜகத்துக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, இதுபோன்ற செயல் தொடரக்கூடாது என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

    மேலும் ஏற்கனவே தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கை அரசு பறிமுதல் செய்த நாட்டுப்படகு, விசைப்படகு என 105 படகுகளை பிப்ரவரி 7 முதல் 5 நாட்களுக்கு ஏலம் விடப்போவதாக இலங்கை அரசு அறிவித்ததையும் மத்திய அரசு கண்டிக்க வேண்டும்.

    ஒரு புறம் இந்திய அரசு தமிழக மீனவர்களை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், குறிப்பாக இந்திய அரசு, இலங்கைக்கு தொடர்ந்து பல வழிகளில் உதவிகள் செய்து வரும் வேளையில் தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்கவும், மீனவர்களின் அனைத்துப் படகுகளை உடனடியாக ஒப்படைக்கவும் இந்திய அரசு, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    Next Story
    ×