search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு.
    X
    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு.

    மாணவ-மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு போட்டி

    தேசிய இளைஞர் தினத்தையொட்டி மாணவ&மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு போட்டு நடைபெற்றது.
    தஞ்சாவூர்:

    சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான தேசிய இளைஞர் தின 
    விழாவினை முன்னிட்டு மன்னார்குடி பாரதிதாசன் ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி அகாடமி சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான 
    பேச்சு ,கட்டுரை போட்டிகள் நடைபெற்றன. 

    2050-ம் ஆண்டுக்குள் ஏற்படப்போகும் பருவநிலை மாற்றங்கள், 
    புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது எப்படி? மத்திய மாநில 
    அரசுகளின் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற இளைஞர்கள் செய்ய 
    வேண்டியது என்ன? இளைஞர்கள் சக்தியை நாட்டின் வளர்ச்சிக்கு 
    எவ்வாறு பயன்படுத்துவது? போன்ற தலைப்புக்களில் கட்டுரை,
    பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
     
    மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 120 கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா அகாடமி வளாகத்தில் நடைபெற்றது. 

    மூத்த குடிமக்கள் பேரவை தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் 
    தலைமை வகித்து பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். 
    அகாடமி நிறுவனர் கே.அன்பழகன் வரவேற்றுப் பேசினார். 

     மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஓய்வுபெற்ற முதல்வர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். தேசிய மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியர் டாக்டர் அன்பரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்று,  “விவேகானந்தரிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது” என்னும் தலைப்பில் பேசினார். 

    கட்டுரைப் போட்டியில் மன்னார்குடி செங்கமலத்தாயார் கல்லூரி மாணவிகள்  அபிராமி, ஜமுனா முதல் பரிசினையும்,  மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரி மாணவிகள் நாகமணி, ரத்தினகுமாரி ஆகியோர் இரண்டாம் பரிசையும்,  திருச்சி வேளாண்மை கல்லூரி மாணவி இனியா, நர்சிங் கல்லூரி மாணவி காவியாஸ்ரீ 
    ஆகியோர் மூன்றாம் பரிசினையும் பெற்றனர். 

    பேச்சுப்போட்டியில் தர்மபுரி அரசு கல்லூரி மாணவி அக்சயா முதல் பரிசினையும்,  மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி மாணவி சுஜிதா இரண்டாம் பரிசையும்,  மதுரை மீனாட்சி கல்லூரி மாணவி சிந்து 
    மூன்றாம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் புத்தகங்களும் பணப்பரிசும் வழங்கப்பட்டன. 

    போட்டித் தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு 
    இலவசமாக  ஒவ்வொரு வாரமும் முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்களில் தேர்வு நடத்தப்பட்டு 
    வெற்றி பெற்றவர்களுக்கு பணப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    முடிவில் பேராசிரியர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.
    Next Story
    ×