search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    காரைக்கால்-தஞ்சை இடையே இரட்டை ரெயில் பாதை

    காரைக்கால்-தஞ்சை இடையே இரட்டை ரெயில்வழி பாதை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    திருவாரூர்:

    திருவாரூர் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தென்னக 
    ரெயில்வே கோட்ட மேலாளரிடம் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு 
    மற்றும்  சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் அளிக்கப்பட்ட 
    மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் ரெயில் நிலையத்தில் செயல்பட்டு வந்த பார்சல் அலுவலகம் மீண்டும் செயல்படுத்திட வேண்டும். ரெயில் நிலையத்தில் அனைத்து சி.சி.டி.வி கேமராக்களையும் செயல்பாட்டில் கொண்டுவர வேண்டும்.

    தூய்மையான குடிநீர் மற்றும் ஏ.டி.எம் வசதிகளை வழங்க வேண்டும், திருவாரூர் வழித்தடத்தில் அதிக அளவு சரக்கு ரெயில் செல்வதால் 
    தஞ்சாவூர் முதல் காரைக்கால் வரை இரண்டு வழி ரெயில்தடம் 
    அமைக்க வேண்டும்.

    திருவாரூரிலிருந்து மாநிலத்தின் தெற்கு பகுதிகளை இணைக்கும் 
    வகையில் கூடுதல் ரெயில் சேவைகளை இயக்க வேண்டும், 
    திருவாரூர் ரெயில்நிலையத்தில் ஏற்கனவே இருந்தது போல் 
    ரெயில்வே பணிமனை மீண்டும் அமைத்திட வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    இந்நிகழ்வில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் முனைவர் அண்ணாதுரை, 
    பயிற்சி இயக்குனர் செல்வகுமார், சுற்றுச்சூழல் இயக்குனர் 
    தர்மதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×