search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்
    X
    விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்

    விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்

    மதுக்கூர் பகுதியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.
    மதுக்கூர்:

    தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் 
    மதுக்கூர் வட்டாரத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் மூலம் 
    அண்டமி, காடந்தன்குடி, பெரியகோட்டை மதுரபாஷினிபுரம், புலவஞ்சி, மஹாதேவபுரம்நெய்வேலி கீழக்குறிச்சி, ஒலையகுன்னம் கிராமங்கள் 
    தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

    மேற்கண்ட கிராமங்களில் வீரிய ஒட்டு மக்காச் சோளம் சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகளிடமிருந்து விருப்ப கடிதம் கோரப்பட்டது. 

    ஒரு கிலோ ரூ.500 மதிப்புள்ள வீரிய ஒட்டு மக்காச் சோள விதைகள் 
    இரண்டரை ஏக்கருக்கு தேவையான 325 கிலோ யூரியா விதை நேர்த்தி 
    செய்ய தேவையான உயிர் உரங்கள் சூடோமோனஸ் மற்றும் பயிர் பாதுகாப்புக்கு தேவையான இயற்கையான மருந்துகளான பவேரியா பேசியானா மெட்டாரைசியம் போன்றவற்றுடன் அசாடிராக்டின் வேம்பு மருந்து கரைசலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தின்கீழ் 15 செயல் விளக்கங்கள் பெறப்பட்டுள்ளது. 
    செயல்விளக்க மொத்த தொகை ரூ.15,000. இதில் ரூ.10000 மானியமாக வழங்கப்பட உள்ளது. 

    விவசாயிகள் பங்கு தொகையாக ரூ.5000 செலுத்தி இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் வரும் விவசாயிகளுக்கு 
    இடு பொருட்கள் வழங்கப்பட்டு தொழிநுட்ப அறிவுரைகளும் 
    வழங்கப்படும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி தெரிவிக்கின்றார்.

    நெம்மேலி கிராமத்தை சேர்ந்த மக்காச்சோளம் சாகுபடி செய்ய 
    முன்னுரிமை அடிப்படையில் விருப்பம் தெரிவித்த நெம்மேலி செல்லத்துரைக்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள இடுபொருட்கள் ரூ.10,000 மானியத்துடன் வழங்கப்பட்டது. 

    வீரிய ஒட்டு ரக விதைகளை வேளாண்மை உதவி இயக்குனர் 
    திலகவதியும் இனக்கவர்ச்சிப் பொறிகளை வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு, விதைநேர்த்திக்கான பயிர் பாதுகாப்பு மருந்துகளை மதுக்கூர் கண்காணிப்பாளர் மதிவாணன், துணை வேளாண்மை அலுவலர் 
    அன்புமணி உரங்களையும் மானியத்தில் வழங்கினர்.
    Next Story
    ×