search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி பஸ் நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகரிப்பால் விலை சரிந்துள்ளது. குறைந்த அளவிலேய
    X
    தருமபுரி பஸ் நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகரிப்பால் விலை சரிந்துள்ளது. குறைந்த அளவிலேய

    தருமபுரி பூ மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகரிப்பால் விலை கடும் சரிவு

    தருமபுரி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரிப்பால் விலை சரிந்துள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நல்ல மழை பெய்து வந்தது. எனவே பூக்களை விவசாயம் செய்யும் விவசாயிகள் அதிக அளவு விளைச்சல் கண்டுள்ளனர். எனவே பூக்களின் வரத்து அதிகரித் துள்ளதாலும் விசேஷ நாட்கள் இல்லாத காரணத்தினாலும் பூக்க ளின் விலையில் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த விலை வீழ்ச்சி விவசாயிகளுக்கு வேதனையை ஏற்ப டுத்தியுள்ளது.

     தருமபுரி பஸ் நிலையத் தில் உள்ள பூ மார்க்கெட்டில் இன்று காலை விற்பனையான பூக்கள் விலை விவரம் வருமாறு:

     மல்லி ஒரு கிலோ  ரூ.800-க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 1500 முதல் 1800 வரை விற்பனையானது குறிப்பிடத் தக்கது.

    இதேபோல் ரோஜா ஒரு கிலோ ரூ.20 முதல் 30- க்கும், சம்பங்கி கிலோ 20 முதல் 25-க்கும் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருவதால் வழிப்பாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் விசேஷ நாட்கள் எதுவும் இல்லாததால் பூக்கள் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்னும் சில நாட்களில் விலை உயரும் என்று எதிர்பார்ப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×