search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    மதுரையில் 100 ரூபாயை தொட்ட சின்ன வெங்காயத்தின் விலை

    மதுரையில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயை தொட்டது. தக்காளியின் விலை 20 ரூபாய்க்கு குறைந்தது.
    மதுரை


    கடந்த சில மாதங்களாக பெய்த கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் காய்கறி செடிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன‌ இதன் காரணமாக தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்ட நாட்டுக் காய்கறிகள் விளைச்சலும் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. 

    இதன் காரணமாக மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ 130 ரூபாய் வரையிலும், கத்தரிக்காய் கிலோ 160 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் முருங்கைக்காய் வரத்து இல்லாத ஒரு கிலோ முருங்கைக்காய் 400 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டன இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து அனைத்து காய்கறிகளும் விலை குறையத்தொடங்கியது. மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் காய்கறிகள் வருவதை தொடர்ந்து சில வாரங்களாக பொது மக்களை அதிர்ச்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தக்காளி, கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய் உள்ளிட்ட நாட்டுக் காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளன. 

    இன்றைய நிலவரப்படி தக்காளி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெண்டைக்காய் 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

    பீட்ரூட், கேரட் 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


    பட்டர் பீன்ஸ், சோயாபீன்ஸ் ஆகியவை 100 ரூபாய்க்கு விற்கப் பட்டு வருகின்றன. பெரிய வெங்காயம் என்றழைக்கப்படும் பல்லாரி 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக நாட்டுக் காய்கறிகளின் விலை அதிகரித்தாலும் சின்னவெங்காயம் விலை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது 30 முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

    இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் தற்போது பாதிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் சில நாட்களாக மதுரை மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது‌ தற்போது 80 முதல் 100 ரூபாய் வரை சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்படுகின்றன.

    கடந்த சில மாதங்களாக முருங்கைக்காய் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. தற்போது முருங்கைக்காய் கிலோ 250 முதல் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் முருங்கைக்காய் பிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×