search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லையில் தினசரி பாதிப்பு 800-ஐ நெருங்கியது

    நெல்லையில் கொரோனா தினசரி பாதிப்பு இன்று 800-ஐ நெருங்கி உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் தினசரி பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து கொண்டிருக்கிறது.  தொடர்ந்து 2 நாட்களாக தினசரி பாதிப்பு 700-ஐ தாண்டிய நிலையில், இன்று வெளியான பரிசோதனை முடிவில் 792 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இதில் நெல்லை அரசு மருத்துவ மனையில் எடுக்கப்பட்ட பரிசோ தனையில் மாவட்டத்தை சேர்ந்த 607 பேரும், மற்ற மாவட்டங்களை சேர்ந்த 76 பேரும் அடங்குவர்.

    மேலும் 10 பேர் தவறான முகவரியை கொடுத்து உள்ளனர். மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே அம்பை, வள்ளியூர், ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    குறிப்பாக வள்ளியூர் மற்றும் ராதாபுரத்தில் தினசரி பாதிப்பு 100 ஆக இருந்தது. இன்று வள்ளியூரில் 108 பேருக்கும், ராதாபுரத்தில் 84 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அம்பையில் 81 பேருக்கும், பாளையில் 50 பேருக்கும், நாங்குநேரியில் 37 பேருக்கும், மானூரில் 35 பேருக்கும், சேரன்மகாதேவியில் 26 பேருக்கும், களக்காட்டில் 28 பேருக்கும் பாப்பாக்குடியில் 24 பேருக்கும் கண்டறியப் பட்டுள்ளது.

    இன்று பாதிப்பு உறுதி செய்யப் பட்டவர்களில் 319 பேர் மாநகர பகுதியில் உள்ளவர்கள் ஆவர். தொடர்ந்து மாநகர பகுதியில் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மக்கள் நெருக்கம், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சுற்றித்திரிவது, முக கவசம் அணி யாமல் செல்வது உள்ளிட் டவை காரணமாக பரவல் தொடர்ந்து உயர்ந்து வருவதாக சுகாதாரத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் அபராதம் விதிக்கும் முறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இன்று பாதிப்பு உறுதி செய்யப் பட்டவர்களில் தியாகராஜ நகரில் ஒரே தெருவில் 4 பேருக்கும், சுத்தமல்லி போலீஸ் குடியிருப்பு, சாந்தி நகர் போலீஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ்காரர்களுக்கும், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் உள்ள டாக்டர்கள் 2 பேர் உள்பட சுமார் 15 டாக்டர்களுக்கும், மாவட்ட துணை கலெக்டர் குடியிருப்பில் ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. லேசான பாதிப்பு உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×