என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நஞ்சை தரிசில் உளுந்து சாகுபடி திட்டம் தொடக்கம்
Byமாலை மலர்20 Jan 2022 8:58 AM GMT (Updated: 20 Jan 2022 8:58 AM GMT)
தஞ்சை மாவட்டத்தில் 150 கிராமங்களில் நஞ்சை தரிசில் உளுந்து சாகுபடி திட்டம் தொடக்கம் விவசாயிகள் கூடுதல் வருவாய் பெறலாம் என தகவல்
தஞ்சாவூர்:
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா,
தாளடி சாகுபடி அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகிறது.
அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்னதாக உளுந்து, பச்சை பயிர் உள்ளிட்டவைகளை தெளித்து, இருக்கும் ஈரப்பதத்திலேயே
தண்ணீர் உரச் செலவில்லாமல் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம்
கூடுதலாக விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் வேளாண்
மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தஞ்சை நஞ்சை தரிசில்
உளுந்து சாகுபடி திட்டம், 150 கிராமங்களில் தொடக்கி வைக்கப்பட்டது.
தஞ்சை அருகே உள்ள சித்தர்காடு கிராமத்தில் வேளாண் உதவி
இயக்குநர் அய்யம்பெருமாள் , துணை இயக்குநர் ஈஸ்வர்,
தேசிய உணவு பாதுகாப்பு தஞ்சை மாவட்ட ஆலோசகர்
இளஞ்செழியன் உள்ளிட்ட அதிகாரிகள் இத்திட்டத்தை
தொடக்கி வைத்தனர்.
மேலும் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலமும் இந்த திட்டம் பற்றி
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கூடுதல் வருவாய் அப்போது வேளாண் உதவி இயக்குநர்
அய்யம்பெருமாள் பேசும்போது, தஞ்சை நஞ்சையில் உளுந்து சாகுபடி திட்டமானது செலவில்லா திட்டமாகும். இதன் மூலம் விவசாயிகளுக்கு
கூடுதல் வருவாய் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் ஆண்டொன்றுக்கு பயிறு வகை உற்பத்தி 7.76 லட்சம் டன் என்பது மேலும் உயரும். தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு உயரும் என்றார்.
இத்திட்டம் குறித்து இயற்கை விவசாயி ராஜராஜன் கூறும்போது,
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே முறையில் அறுவடைக்கு
முன்பு உளுந்து பயறு வகைகள் தெளித்து அறுவடை செய்த பின்பு
நன்கு வளர்ந்து வரும்.
தண்ணீர் மற்றும் உரத் தேவை இன்றி இயற்கை உரமாகவும்
இதன் வேர்கள் மாறுகின்றன.
மேலும் அறுவடைக்கு பின்பு பயறு உளுந்து வகைகளின் தழைகள் கால்நடைகளுக்கு உணவாக இருந்து வருகிறது. மீண்டும் இந்த முறை செயல்படுத்தப்படும்.
ஆனால் விவசாயிகளுக்கு கூடுதலாக வருமானம் கிடைக்கும் என்றார்.
Next Story
×