என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மார்த்தாண்டம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது
Byமாலை மலர்20 Jan 2022 7:01 AM GMT (Updated: 20 Jan 2022 7:01 AM GMT)
மார்த்தாண்டம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
குழித்துறை:
மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சி கல்லுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 70).
இவரது வீடு அருகே ஒரு குடும்பத்தார் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டி வருகிறார்கள். கட்டுமான பணியை வீட்டு உரிமையாளரின் மனைவி அடிக்கடி சென்று பார்த்து வந்தார். அவருடன் 4 வயது மகளும் இருந்தார்.
சம்பவத்தன்று அந்த பெண்மணி வீடு கட்டும் இடத்துக்கு சென்றார். அப்போது அவருக்கு தாகம் ஏற்பட்டது. இதனால் அவர் தனது மகளிடம் அருகில் உள்ள முதியவர் ரவீந்திரன் வீட்டுக்கு சென்று பாட்டிலில் தண்ணீர் வாங்கி வரும்படி கூறினார்.
அப்போது சிறுமிக்கு முதியவர் ரவீந்திரன் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் சிறுமி வலியால் அலறினார். சத்தம் கேட்டு தாயார் ஓடி வந்தார். அவரை கண்டதும் முதியவர் தப்பி ஓடினார். இதில் அவர் கீழே விழுந்து காயம் அடைந்தார். இதனையடுத்து முதியவரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் ரவீந்திரனை கைது செய்தனர்.
அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது அவர் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் காயமடைந்த சிறுமிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story
×