search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக யாகசாலையை சுற்றி பஞ்ச வித்துக்கள்

    யாகசாலையை சுற்றிலும் நெல், எள், கொள்ளு, உளுந்து, பாசிப்பயிறு ஆகிய 5 தானியங்கள் கலந்த பஞ்ச வித்துக்கள் போடப்பட்டன.
    உடுமலை:

    உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 27-ந்தேதி காலை 9.45 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடைபெற உள்ளது. மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு பணிகள் நிறைவுற்றுள்ளன.

    யாகசாலையில் வருகிற 23-ந் தேதி மங்கள இசையுடன் பூஜைகள் தொடங்குகின்றன. இந்த நிலையில் யாகசாலையை சுற்றிலும் நெல், எள், கொள்ளு, உளுந்து, பாசிப்பயிறு ஆகிய 5 தானியங்கள் கலந்த பஞ்ச வித்துக்கள் போடப்பட்டன. 

    அங்கு பூஜை நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீரீதர், செயல் அலுவலர் வெ.பி.சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×