என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வரத்து அதிகரிப்பு- சேலத்தில் தக்காளி விலை 15 ரூபாயாக சரிவு
Byமாலை மலர்19 Jan 2022 4:58 AM GMT (Updated: 19 Jan 2022 4:58 AM GMT)
கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்ற தக்காளி விலை மேலும் படிப்படியாக சரிந்து தற்போது ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடர் மழை பெய்தது. இதனால் தக்காளி செடிகள் மற்றும் காய்கள் அழுகியதால் சேலம் மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து சரிந்தது. இதனால் அதிகபட்சமாக தக்காளி விலை அப்போது ஒரு கிலோ 140 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் தக்காளியை வாங்க முடியாமல் பொது மக்கள் தவித்தனர்.
இந்தநிலையில் மழை குறைந்ததால் மீண்டும் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்ற தக்காளி விலை மேலும் படிப்படியாக சரிந்து தற்போது ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகிறது. மேலும் 3 கிலோ தக்காளி 40 ரூபாய்க்கும் மொத்தமாக விற்கப்படுகிறது. இதனால் பொது மக்கள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். இதே போல கடந்த மாதம் 70 ரூபாய்க்கு விற்ற வெண்டைக்காய் 20 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்ற அவரைக்காய் 55 ரூபாய்க்கும், 105 ரூபாய்க்கு விற்ற கேரட் 75 ருபாய்க்கும் விற்பனையாகிறது.
மற்ற காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-
உருளை கிழங்கு ஒரு கிலோ ரூ.35, சின்ன வெங்காயம் 40, பெரிய வெங்காயம் 40, பச்சை மிளகாய் 56, கத்திரி 24, பீர்க்கங்காய் 16, சுரக்காய் 16, புடலை 18, பாகற்காய் 34, தேங்காய் 30, முள்ளங்கி 16, பீன்ஸ் 50, மாங்காய் 60, வாழைப்பழம் 20 முதல் 40 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. கீரைகள் ஒரு கட்டு 20, பப்பாளி பழம் ஒரு கிலோ 20, கொய்யா 40, மாதுளை 140, ஆப்பிள் 170, சாத்துக்குடி 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Next Story
×