search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக ஏ.ஜி.பாபு பதவியேற்ற போது எடுத்தப்படம்.
    X
    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக ஏ.ஜி.பாபு பதவியேற்ற போது எடுத்தப்படம்.

    திருப்பூர் மாநகரில் இரவு ரோந்துப்பணி அதிகரிக்கப்படும் - புதிய போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு பேட்டி

    பொதுமக்களின் மனுக்களின் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் தெரிவித்தார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த வே.வனிதா சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். 

    வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த ஏ.ஜி.பாபு, ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்று கொண்டார். 

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

     திருப்பூர் மாநகரில் காவல்துறையினர் பொதுமக்களுடன் இணக்கமாக செயல்படுவார்கள். பொதுமக்களின் மனுக்களின் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

    சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கொலை, கொள்ளை, சாலை விபத்துக்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இதற்கு முன்பாக இருந்த காவல் ஆணையர்கள் கொண்டு வந்த சிறப்பான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். வழிப்பறி, திருட்டு சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதுடன், இரவு ரோந்து பணி அதிகரிக்கப்படும் என்றார்.
    Next Story
    ×