என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  செய்துங்கநல்லூரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் செய்துங்கநல்லூர் சுடுகாட்டுப் பகுதி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்தனர்.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு  வெங்கடேசன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

  செய்துங்கநல்லூர் சுடுகாட்டுப் பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சுந்தரம் (வயது 22), வேல்பாண்டி (20), கிருஷ்ணமூர்த்தி (19) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

  அதில் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×