என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  ஊழியர்களுக்கு கொரோனா - திருப்பூரில் 2 வங்கிகள் மூடல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  2 வங்கிகளிலும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் சானிடைசர் தெளிக்கப்பட்டு மாஸ் கிளீனிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
  திருப்பூர்:

  கொரோனா மூன்றாவது அலை வேகமெடுத்துள்ளது. திருப்பூரில் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படும்போது, வங்கி கிளை உடனடியாக மூடப்படுகிறது. 

  வங்கியில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மங்கலம் கிளையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இந்த வங்கி நேற்று காலை வழக்கம்போல் இயங்கியது. தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து உடனடியாக வங்கி மூடப்பட்டது. இதேபோல் 15  வேலம்பாளையம் கிளையில் பணிபுரியும் வங்கி ஊழியர் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

  இதையடுத்து, அந்த வங்கியும் மூடப்பட்டுள்ளது. 2 வங்கிகளிலும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் சானிடைசர் தெளிக்கப்பட்டு மாஸ் கிளீனிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வங்கியில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
  Next Story
  ×