என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சடலம்
  X
  சடலம்

  தோட்டத்தில் திருட முயன்றவர் அடித்துக் கொலை- சடலம் ஆற்றில் வீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்த நபர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
  கோவை:

  கோவை புறநகர்ப்பகுதியான பூலுவம்பட்டியில் உள்ள நொய்யல் ஆற்றில் ஒரு ஆண் சடலம் மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்த நபர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அந்த நபர் சித்திரைச்சாவடியில் உள்ள ஒரு தோட்டத்தில் திருட முயன்றபோது, அவரை அங்கிருந்த தொழிலாளர்கள் பிடித்து கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் இறந்துபோனார். பின்னர் உடலை ஆற்றில் வீசி உள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

  இந்த கொலை தொடர்பாக, தோட்டத்தில் வேலை செய்த 10 தொழிலாளர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்திவருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×