search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    சுசீந்திரம் அருகே ரவுடியை கொன்றது 5 பேர் கொண்ட கும்பல் - கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்து கட்டியது அம்பலம்

    சுசீந்திரம் அருகே ரவுடியை 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே குஞ்சன்விளை பகுதியை சேர்ந்தவர் தங்க கிருஷ்ணன் (வயது 39).

    இவர் மீது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளது. குமரி மாவட்ட ரவுடிகள் பட்டியலில் தங்க கிருஷ்ணன் பெயர் உள்ளது. தங்க கிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக சேலம் பகுதியில் உள்ள ஒரு பெண் வக்கீல் ஒருவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று கொலை வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக தங்ககிருஷ்ணன் கோர்ட்டுக்கு வந்தார். வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகி விட்டு இரவு குஞ்சன் விளையில் உள்ள வீட்டில் இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வக்கீல் பிரபு, தங்க கிருஷ்ணனிடம் சென்று மது அருந்த வருமாறு அழைத்தார்.

    பின்னர் அங்கேயே தங்ககிருஷ்ணன், பிரபு மற்றும் சிலர் அந்த பகுதியில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கும்பல் தங்க கிருஷ்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

    இதில் தங்க கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்த தங்க கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தங்ககிருஷ்ணனின் தந்தை சுந்தரமகாலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    குஞ்சன்விளையைச் சேர்ந்த பிரபு மறவன்குடியிருப்பைச் சேர்ந்த ஜெதீஸ் கோட்டார் கலை நகரைச் சேர்ந்த சுதன் மற்றும் 2 நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தங்க கிருஷ்ணன் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட தங்ககிருஷ்ணன் மனைவிக்கும் குஞ்சன் விளையை சேர்ந்த பிரபுவுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது.

    இந்த விவகாரம் தங்க கிருஷ்ணனுக்கு தெரிய வந்ததையடுத்து தங்க கிருஷ்ணன் மனைவியையும், பிரபுவையும் கண்டித்துள்ளார். இதைய டுத்து தங்க கிருஷ்ணன் பிரபுவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி உள்ளார். இது பிரபுவுக்கு தெரிய வந்தது.

    நேற்று தங்க கிருஷ்ணன் வீட்டிற்கு வந்ததை அறிந்த பிரபு அவரை மது அருந்த வருமாறு அழைத்து வந்து கூலிப்படையை ஏவி தீர்த்துக் கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. இக்கொலை வழக்கு தொடர்பாக 2 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 
    Next Story
    ×