search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தொற்றுடன் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள்

    திண்டுக்கல் அருகே கொரோனா தொற்றுடன் வடமாநில தொழிலாளர்கள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா 3ம் அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை 33 ஆயிரத்து 481 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 32 ஆயிரத்து 722 பேர் குணமடைந்தனர்.

    107 பேர் சிகிச்சையில் உள்ளனர். 652 பேர் இது வரை கொரோனாவால் பாதிக்கப் பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த 10 மாதங்களுக்கு பிறகு தற்போது கொரோனா, டெல்டா, ஒமைக்ரான் என வெவ்வேறு வடிவங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.

    கடந்த 3 நாட்களில் மட்டும் 107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

    திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி  அருகே தனியார் ஜூஸ் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு வடமாநில தொழிலாளர்கள் மட்டுமின்றி உள்ளூர் தொழிலாளர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவருடன் பணிபுரியும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். ஆனால் தொற்று கண்டறியப்பட்ட தொழிலாளர்களை தனிமைபடுத்தாமல் அவர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    ஏராளமானோர் பணிபுரிந்து வரும் இந்த தொழிற்சாலையில் தொற்றுடன் ஊழியர்கள் பணியில் இருப்பதால் மேலும் பலருக்கு பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதாரத்துறையினர் அங்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் தனியார் நிறுவனங்கள் இது போன்று தொற்று கண்டறி யப்பட்ட தொழிலாளர்களை பணியில் வைக்காமல் அவர்களை தனிமைபடுத்தி விடுப்பு அளிக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.
    Next Story
    ×