search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தயாராகும் மைதானம்.
    X
    தயாராகும் மைதானம்.

    ஆத்தூர் கூலமேட்டில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 17ம் தேதி ஆத்தூர் கூலமேட்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது.
    ஆத்தூர்:

    தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கொரோனா 3&ம் அலை பரவல் உள்ளதால் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி மாடுபிடி வீரர்கள் மாடு பார்வையாளர்கள் ஆகியோர் கொரோனா சான்றிதழ் பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும் என விதிமுறைகள் உள்ளது. 

     சேலம் மாவட்டம் ஆத்தூர் கூலமேடு பகுதியில் பல தலைமுறைகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.  இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 17 ம் தேதி நடைபெறும் என விழாக்குழு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  

    அதற்கான வாடிவாசல் மற்றும் பாதுகாப்பு தடுப்புகள், மாடுகள் உள்ளே வரும் வழி ,மருத்துவ பரிசோதனை செய்யப்படும் இடம் ,விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட மாடுகளை வெளியே சேகரிக்கும் இடம் என அனைத்து ஏற்பாடுகளும் உண்டான இரும்பு கம்பி வேலி அமைக்கும் பணி மும்முரமாக  நடைபெற்றுவருகினறது.

    Next Story
    ×