search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    வடமாநில தொழிலாளர்களுக்கு முககவசம் வழங்கிய போலீசார்

    திருப்பூர் ரெயில் நிலையம் பகுதியில் வடக்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    திருப்பூர்:

    கொரோனா தொற்று பரவலை  தடுக்கும் வகையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு நேர மற்றும் இன்று  ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், சானிடைசர் பயன்பாடு உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அனைத்து பகுதியிலும் போலீசார், சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர். கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. 

    இந்தநிலையில் திருப்பூர் ரெயில் நிலையம் பகுதியில் வடக்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    கண்காணிப்பின் போது வட மாநிலத்திலிருந்து ரெயில் மூலம் திருப்பூர் வந்திறங்கிய பலரும் முககவசம் இன்றி வந்தது தெரிந்தது. 

    இதையடுத்து கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, முககவசம் இன்றி பிடிபட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்து அனுப்பினர்.
    Next Story
    ×