search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்
    X
    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்

    திண்டுக்கல்லில் சாலை மறியல் போராட்டம்

    திண்டுக்கல்லில் சுகாதார வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் உள்ள பாறைப்பட்டியில் கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு வந்தது.

    பேகம்பூரில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பணியின் போது பிரதான சாக்கடை வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டது.

    ஆனால் இது வரை தூர் வாரப்படாததால் மழை பெய்யும் சமயத்தில் பேகம்பூர், குடைப்பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாக்கடையில் செல்லாமல் அந்தோணியார் கோவில் தெருவில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.

    கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவால் ஏற்கனவே மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் கழிவுநீர் வெளியேறி அப்பகுதி மக்களை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     
    தங்கள் வீட்டில் இருந்த மருந்து பாட்டில்கள் மற்றும் மருந்துகளை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தாலுகா போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    விரைவில் அதிகாரிக ளிடம் எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×