search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத் பேசிய காட்சி.
    X
    நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத் பேசிய காட்சி.

    உடுமலையில் விவசாய பொருட்கள் உற்பத்தி - ஏற்றுமதி கருத்தரங்கு

    நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத பேட்டரியில் இயங்கக்கூடிய இரண்டு வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட்டது.
    உடுமலை:

    விவசாய பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் உடுமலை ஜி.வி.ஜி. கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் தலைமை வினீத் தாங்கினார். 

    பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகள் மூலம் விவசாய முன்னேற்றத்திற்காக செய்யப்படுகின்ற நிதி உதவிகள் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விளக்க உரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் விரிவுரையாளர்கள் ,தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பல்வேறு விதமான வழிகாட்டுதலையும், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். 

    வளாகத்தில் தோட்டக்கலை துறை வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்கள் குறித்த கண்காட்சியும், தனியார் சார்பில் விவசாய உபகரணங்கள், அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

    அதுமட்டுமின்றி தேங்காய் பறிக்கும் எந்திரம், இயற்கை முறையில் விளைந்த பொருட்களில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத பேட்டரியில் இயங்கக்கூடிய இரண்டு வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட்டது. 

    நிகழ்ச்சியில் மாதையன் அங்கமுத்து, பரமேஸ்வரன், கோபாலகிருஷ்ணன், அருண்கார்த்திக், ரவீந்திரன் கெங்குசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் பில்டர்ஸ் அசோசியேசன் தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    கருத்தரங்கில் ஆர்.டி.ஓ கீதா, தாசில்தார் ராமலிங்கம், குடிமைப்பொருள் தாசில்தார் தயானந்தன், திருப்பூர் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சுரேஷ் ராஜன், வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் தேவி, தோட்டக்கலை உதவி இயக்குனர் கோபிநாத் உள்ளிட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா உடுமலை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    Next Story
    ×