search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை தமிழக - கேரள எல்லையில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரம்

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலும் ஒரு சில கிராமங்களில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் தொற்று பாதிப்புகள் பெருமளவு குறைந்து அவ்வப்போது ஒரு சிலருக்கு பாதிப்பு என்ற நிலை காணப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகிறது. 

    உடுமலை நகராட்சி தில்லை நகர், தங்கம்மாள் ஓடை விநாயகர் கோவில் தெரு, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் 5 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதே போல் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலும் ஒரு சில கிராமங்களில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்கள் உடுமலை அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு வருகின்றனர். தற்போது 15பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    உடுமலை தமிழக-கேரள எல்லை அருகே அமைந்து ள்ளதால் இரு மாநில மக்களும் 2 இடங்களுக்கும் சென்று வருகின்றனர். தொற்று பரவலை அடுத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    அதன் அடிப்படையில் உடுமலை தமிழக-கேரள எல்லையான சின்னாறு சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து பொதுமக்களை கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்கின்றனர்.

    மேலும் திருப்பூர் மாவட்ட எல்லைகளான மடத்துக்குளம், அந்தியூர், புதுப்பாளையம், தேவனூர் புதூர் ஆகிய பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 

    யாருக்காவது தொற்று அறிகுறி தெரிந்தால் சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் முகக்கவசம் அணி யாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
    Next Story
    ×