search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    தாட்கோ மூலம் நிலம் வாங்க மகளிருக்கு மானியத்துடன் கடன்

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவரிடமிருந்து நிலம் வாங்க வேண்டும்.
     திருப்பூர்:

    தாட்கோ மூலம் நிலம் வாங்க மகளிருக்கு கடன் வழங்கப்பட உள்ளது. 

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தப்படுத்தி வருகிறது. அதில் நிலம் வாங்குவதற்கும், நிலத்தை மேம்படுத்துவதற்கும் வங்கியுடன் இணைந்து மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டு வருகிறது. 

    இத்திட்டத்தில் கடன் பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மகளிராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமலும், 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் அதிகபட்சமாக நன்செய் 2.50 ஏக்கர்  அல்லது 5 ஏக்கர் புன்செய் நிலம் வாங்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவரிடமிருந்து நிலம் வாங்க வேண்டும்.  

    இத்திட்டத்தில் பத்திரப் பதிவு கட்டணத்தை அரசு தள்ளுபடி செய்துள்ளது. நிலம் வாங்கும் மொத்த முதலீட்டில் 30 சதவீதம் அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமாகவும், மீதித் தொகை வங்கிக் கடன் மூலமாகவும் வழங்கப்படும்.  

    நில மேம்பாட்டுத் திட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நில வளத்தை மேம்படுத்துதல், ஆழ்துளைக் கிணறு அல்லது திறந்த வெளிக்கிணறு அமைத்தல், பம்ப்செட் கொட்டகை அமைத்தல் போன்றவற்றுக்காகவும் 30 சதவீதம் மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படும். 

    இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971112 என்ற எண்ணிலோ அல்லது உரிய ஆவணங்களுடன் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×